என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளி பெண்"
- மியா லு ரூக்ஸ்-க்கு ஒரு வயது இருந்தபோதே காது கேட்க முடியாமல் போனது.
- சிடிம்மா அடெட்ஷினா இறுதிப்போட்டி வரை தேர்வானார்.
ஜோகன்னஸ்பெர்க்:
தென் ஆப்பிரிக்காவில் 2024-ம் ஆண்டுக்கான அழகிப்போட்டி சமீபத்தில் நடைபெற்றன. இதில் அந்த நாட்டைச் சேர்ந்த ஏராளமான இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்களுக்கு பல்வேறு கட்ட தகுதித்தேர்வுகள் நடைபெற்றன. இதன் முடிவில் மியா லு ரூக்ஸ் (வயது 28) என்ற பெண் தென் ஆப்பிரிக்க அழகி என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் அவர் காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு ஒரு வயது இருந்தபோதே காது கேட்க முடியாமல் போனது. பின்னர் `கொஹ்லியர் இம்பிளான்ட்' என்ற சிகிச்சையால் தான் ஒலிகளை உணர்கிறார். இதன் மூலம் அந்த நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக காது கேட்காத மாற்றுத்திறனாளி ஒருவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கனவு இன்று நிஜமாகி விட்டது. இதேபோல் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மற்ற மாற்றுத்திறனாளிகளின் கனவுகளை நனவாக்கவும் தான் விரும்புகிறேன். அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காகவே தான் இந்த போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
இதற்கிடையே சிடிம்மா அடெட்ஷினா இறுதிப்போட்டி வரை தேர்வானார். ஆனால் பெற்றோர் நைஜீரியா, மொசாம்பிக் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவரது தாயகம் குறித்த சர்ச்சைகள் எழுந்தன.
இதனையடுத்து அவர் போட்டியில் இருந்து விலகினார். இவ்வாறு பல தடைகளைத் தாண்டியே தற்போது மாற்றுத்திறனாளியான மியா லு ரூக்ஸ் தென் ஆப்பிரிக்க அழகியாக தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- போலியோவால் பாதிக்கப்பட்டு கால்கள் நடக்க முடியாமல் இருந்து வருகிறார்.
- ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் வேலை நடைபெற்று வந்தது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் சொந்த வீடு இல்லாமல் பல்வேறு இடங்களில் வசித்து வந்த விளிம்பு நிலை மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு படி பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் படி வட்டாட்சியர் த.சுகுமார் அறிவுறுத்தலின்படி இது வரை 1500 பேருக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்ய ப்பட்டு வழங்கப்பட்டது.
பேராவூரணி அருகே திருவள்ளுவர்புரம் பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டு மனைகளில் 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி தேவிகா(34) தனது தாயார் சகுந்தலா ஆதரவுடன் வசித்து வருகிறார்.
போலி யோவால் பாதிக்கப்பட்டு கால்கள் நடக்க முடியாமல் இருந்து வருகிறார்.தனக்கு உதவி செய்திட வேண்டும் என பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரிடம் மனு கொடுத்திருந்தார்.
இதனை அறிந்த கோட்டாட்சியர் பிரபாகரன் உதவி செய்வதாக கூறி உள்ளார்.
இது குறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அருள்சூசை வீடு கட்டி கொடுப்பதாக உறுதி கூறினார். ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் வேலை நடைபெற்று வந்தது.
நேற்று வெள்ளிக்கிழமை கோட்டாட்சியர் பிரபாகரன் புதிய இல்லத்தை திறந்து வைத்தார்.
உடன் வட்டாட்சி யர் சுகுமார், மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர் சுமதி நீலகண்டன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக வீடு கட்டிக் கொடுத்த அருள் சூசை மற்றும் கோட்டாட்சியர் பிரபாகரன், வட்டாட்சியர் சுகுமார் ஆகியோருக்கு தேவிகா மற்றும் அவரது தாயார் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
- மதுரையில் மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- பேஸ்புக் மூலம் இருவரும் பழக்கமானார்கள்.
மதுரை
மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த 27 வயது மாற்றுத்திறனாளி பெண் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கால்களை இழந்த மாற்றுத்திறனாளியான நான் 6-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறேன். எனது பெற்றோர் மதுரை-தேனி மெயின் ரோட்டில் தையல்கடை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் மதுரை பொட்டக்குளம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சதுரகிரி மகன் மணிகண்டன் (வயது 23) என்பவர் பழக்கமானார். இருவரும் அடிக்கடி பேஸ்புக் மூலம் பேசிக்கொண்டு வந்தோம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று எனது பெற்றோர் கடைக்கு சென்று விட நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது அங்கு வந்த மணிகண்டன் என்னிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். திடீரென அவர் என்னிடம் அத்துமீற முயன்றார். ஆனால் அதற்கு நான் மறுத்தேன்.
அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இவ்வாறு பலமுறை மணிகண்டன் என்னிடம் உறவு கொண்டார். இதில் நான் கர்ப்பம் ஆனேன். இதை அறிந்த மணிகண்டன் உடனே மாத்திரை மற்றும் பப்பாளியை சாப்பிட வைத்து அந்த கர்ப்பத்தை கலைக்க செய்தார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மணிகண்டன் என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். மேலும் என்னை திருமணம் செய்யவும் மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் எனது பெற்றோரை அழைத்துக் கொண்டு பொட்டக்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது அவரும், அவரது தாயார் பஞ்சவர்ணம் எங்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் அக்பர்கான் ஆலோசனைபேரில், மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா அடங்கிய தனிப்படை அமைக்கப் பட்டது. அவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்தபெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த திருமல்வாடி அருகே உள்ள கீழ்சீங்காடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 30), ஜே.சி.பி. டிரைவர்.
இவர் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரம் 18-ந் தேதி பெல்லுஹள்ளியை சேர்ந்த வாய் பேச முடியாத, பூ கட்டும் தொழில் செய்து வந்த 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், பென்னாகரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நேற்று இந்த வழக்கில் நீதிபதி (பொறுப்பு) ஜீவானந்தம் தீர்ப்பு வழங்கினார். மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். ஒரு மாதத்திற்குள் அபராதம் கட்ட தவறினால், அவருக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்றும் நீதிபதி ஜீவானந்தம் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் உமா மகேஸ்வரி ஆஜரானார். #tamilnews
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே தாசம்பட்டி அடுத்துள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் சத்யா (வயது40). மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கடந்த 21-ந்தேதி அன்று இரவு அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் வீட்டில் புகுந்து சத்யா இருக்கும் அறைக்குள் சென்றார். அப்போது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சத்யா சத்தம் போட்டார். உடனே முருகேசன் எழுந்து வந்து ராமசாமியை பிடித்தார். பின்னர் வீட்டிற்கு வெளியில் கொண்டு வந்து பொதுமக்கள் மத்தியில் தர்ம அடி கொடுத்தனர்.
இதையடுத்து பென்னாகரம் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த ராமசாமி மீண்டும் சத்யாவிடம் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த சத்யா நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்தார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சத்யா நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் தரடாப்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சத்யா (வயது 27), வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு இந்துமதி (8) என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் சத்யா மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். இந்த கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தனர். செங்கம் அருகில் உள்ள கரியமங்கலம் கிராமத்திற்கு சென்று நாட்டு வைத்தியம் பார்க்கும் கன்னியம்மாள் (70) என்ற மூதாட்டியிடம் கருவை கலைக்கும்படி கூறியுள்ளனர். இதையடுத்து மூதாட்டி எருக்கன் குச்சி வைத்து கருவை கலைக்கும் சிகிச்சை அளித்துள்ளார்.
இதனால் சத்யாவிற்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சத்யாவின் உடல்நிலை கவலைக்கிடமானது. இதனையடுத்து அவரை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை வீட்டுக்கு எடுத்து வந்த உறவினர்கள், போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து தண்டராம்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி, சாத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கருக்கலைப்பு செய்த கன்னியம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்தவர் அமுதசாந்தி. சிறு வயது முதல் மாற்றுத்திறனாளியான இவர் படிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் அவரது பெற்றோர்களால் படிக்க வைக்க முடியவில்லை. தனது உறவினர்கள் உதவியால் சாந்தி ஆசரமத்தில் படித்து கல்லூரி படிப்பை முடித்தார்.
பின்னர், தியாகம் பெண்கள் அறக்கட்டளை மூலம் பெண்களுக்கு இலவசமாக தொழிற்பயிற்சி வழங்கினார். இதனால் ஏராளமான பெண்கள் பயனடைந்தனர். மேலும், தனது கல்வியை மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என எண்ணினார். இதையடுத்து மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக டியூசன் அளித்தார்.
9 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கிராமப்புறக்களில் உள்ளவர்கள் கல்வி குறித்து விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுத்து வருகின்றனர். குழந்தை திருமணம் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்